அமைதியையும் அறநெறி விழுமியங்களையும் வளர்க்கும் நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 5 அன்று சர்வதேச மனசாட்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026-ஆம் ஆண்டின் கருப்பொருள் 'அமைதிக்காக ஒன்றிணைவோம்: மனசாட்சியிலிருந்து கூட்டுச் செயல்பாட்டை நோக்கி' (Together for Peace: From Conscience to Collective Action) என்பதாகும். தனிநபர்களும் சமூகங்களும் தங்கள் அறப் பொறுப்புகளைச் சிந்தித்து, தனிப்பட்ட மனசாட்சியை அமைதிக்கான கூட்டு முயற்சிகளாக மாற்ற இந்நாள் வலியுறுத்துகிறது. சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதை மற்றும் சமூகங்கள், நாடுகளுக்கு இடையிலான உரையாடல் மூலமே நிலையான அமைதிப் பண்பாடு உருவாகும் என்பதை இது நினைவூட்டுகிறது.