இந்திய மருந்துத் தொழில்துறை சிக்கலான பொதுப் பெயர் மருந்துகள் (complex generics), உயிரியல் ஒப்புமை மருந்துகள் (biosimilars), புத்தாக்கம் ஆகியவற்றை நோக்கித் தன் கவனத்தைத் திருப்பி வருகிறது. மருந்து ஏற்றுமதியில் மதிப்பின் அடிப்படையில் 3% உலகப் பங்குடன் 11-ஆவது இடத்திலும், அளவின் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் இந்தியா உள்ளது. உலகப் பொதுப் பெயர் மருந்துத் தேவையில் சுமார் 20%-ஐ நிறைவு செய்யும் இந்தியா, FY25-இல் 191 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது; இதில் பாதிக்கும் மேல் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற கடுமையான ஒழுங்குமுறைச் சந்தைகளுக்குச் சென்றது. உலகின் பெரும்பாலான DPT, BCG, தட்டம்மை தடுப்பூசிகளையும் இந்தியா வழங்குகிறது; அதன் மருத்துவ உபகரணத் துறை FY25-இல் 187 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.