தேசிய மின்சாரத் திட்டத்தின் (NEP) கீழ், இந்தியாவின் மண்டலங்களுக்கு இடையேயான மின் பரிமாற்றத் திறன் 2025-ல் சுமார் 120 ஜிகாவாட்டிலிருந்து (GW) 2027-ல் 143 GW ஆகவும், 2032-ல் 168 GW ஆகவும் உயர்த்தப்பட உள்ளது. தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், மண்டலங்களுக்கு இடையே தடையற்ற மின் ஓட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் நோக்கங்கள். 2032-க்குள் உச்ச மின் தேவை சுமார் 388 GW ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6.48 லட்சம் சர்க்யூட் கிலோமீட்டர் (ckm) மின் பாதைகள் மற்றும் 2,345 GVA மின்மாற்றத் திறனும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன.