மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MeitY) கீழ் உள்ள IndiaAI இயக்கம், EKA-1, Dhir 2B, Dhir 5B ஆகிய மூன்று உள்நாட்டு அடித்தள மொழி மாதிரிகளை (foundation language models) அறிமுகப்படுத்தியது. சோகெட் AI லேப்ஸ் (Soket AI Labs) உருவாக்கிய EKA-1, 26.3 பில்லியன் அளவுருக்களைக் (parameters) கொண்டது; 22 அட்டவணை இந்திய மொழிகளையும் ஆங்கிலத்தையும் ஆதரிக்கிறது. இது கணிதம், நிரலாக்கம் (coding), தர்க்கச் சிந்தனை (reasoning), வங்கி, நிதிச் சேவைகள், இணையப் பாதுகாப்பு ஆகிய பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ZenteiQ AiTech Innovations நிறுவனம் உருவாக்கிய Dhir 2B மற்றும் Dhir 5B முறையே 2 பில்லியன் மற்றும் 5 பில்லியன் அளவுருக்களைக் கொண்டவை. 2024-இல் ஒப்புதல் அளிக்கப்பட்ட IndiaAI இயக்கம், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுச் சூழலை மேம்படுத்த MeitY-ஆல் செயல்படுத்தப்படுகிறது. BharatGen (Param 2 – 17B), Sarvam AI, Gnani.ai, Krutrim, Project Indus ஆகியவை பிற இந்திய AI மாதிரிகள் அல்லது தளங்கள் ஆகும்.