இந்திய மருந்தியல் தொகுப்பு (Indian Pharmacopoeia) 2026-இன் 10-ஆவது பதிப்பு வெளியீட்டின்போது, உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) மருந்துப் பாதுகாப்புக் கண்காணிப்புக்கு (pharmacovigilance) பங்களிப்பதில் இந்தியா தற்போது உலக அளவில் 8-ஆவது இடத்தில் உள்ளது என்றும், பத்தாண்டுகளுக்கு முன்பு இது 123-ஆவது இடத்தில் இருந்தது என்றும் அரசு தெரிவித்தது. புதிய பதிப்பில் 121 தனிவரைவுகள் (monographs) சேர்க்கப்பட்டு, மொத்த எண்ணிக்கை 3,340 ஆக உயர்ந்துள்ளது. இரத்தக் கூறுகள் குறித்த 20 தனிவரைவுகளை உள்ளடக்கிய உலகின் முதல் மருந்தியல் தொகுப்பு இதுவே. 19 உலகளாவிய தெற்கு நாடுகள் இந்திய மருந்தியல் தொகுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளன.