இந்தியா தனது முதல் கட்டற்ற வெளி (free-space) குவாண்டம் விசைப் பகிர்வு (QKD - Quantum Key Distribution) இணைப்பை வெற்றிகரமாகச் செய்து காட்டியுள்ளது. 5.56 கி.மீ. நீளமுள்ள இந்த இணைப்பு, பாஸ்கராச்சார்யா விண்வெளிப் பயன்பாடுகள் மற்றும் புவித்தகவலியல் தேசிய நிறுவனத்தையும் (BISAG-N) IIT காந்திநகரையும் இணைத்தது. QKD, குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளைப் பயன்படுத்தி மறையாக்க விசைகளைப் பாதுகாப்பாகப் பரிமாறுகிறது. கட்டற்ற வெளி இணைப்பு இந்தக் குவாண்டம் சமிக்ஞைகளை ஒளியிழை (optical fibre) வழியாக அல்லாமல் திறந்த வெளிக்காற்றின் வழியே அனுப்புகிறது; இந்த தூரத்தில் நாட்டின் முதல் இத்தகைய இணைப்பு இதுவே.