சுரங்கக் கழிவுகள் குறித்த (tailings) தனது முதல் முழுமையான கொள்கையை இந்தியா வெளியிட்டுள்ளது. சுரங்கக் கழிவுகள், கழிவுப்படிவுக் குளங்கள், கசடு (slag) மற்றும் தொழிற்சாலை எச்சங்களிலிருந்து லித்தியம், கோபால்ட், நிக்கல் மற்றும் அரிய மண் தனிமங்கள் போன்ற முக்கிய மற்றும் உத்திசார் கனிமங்களை மீட்டெடுக்க இது அனுமதிக்கிறது. இந்தியச் சுரங்கப் பணியகம் (IBM), CMPDI மற்றும் அணுக் கனிமங்கள் இயக்ககம் (AMD) இப்பொருட்களை ஆய்வு செய்யும். செலினியம், டெல்லூரியம், ஜெர்மானியம், மாலிப்டினம் மற்றும் வெள்ளி போன்ற துணைப்பொருள் கனிமங்களையும் மீட்டெடுக்கலாம். இறக்குமதியைக் குறைத்துப் பசுமைத் தொழில்நுட்பத் தொழில்களுக்கு விநியோகிப்பதே இதன் நோக்கம்.