அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பத்து நாடுகள் 'நிலையான வளத்துக்கான பாதுகாப்பான அடித்தளங்கள் குறித்த சான் பிரான்சிஸ்கோ பிரகடனத்தில்' (San Francisco Declaration on the Secure Foundations of Enduring Prosperity) கையெழுத்திட்டன. சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதே இதன் நோக்கம். கையெழுத்திட்ட நாடுகள்: அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், ஐக்கிய இராச்சியம். குறைக்கடத்திகள், முக்கியக் கனிமங்கள், எரிசக்தி உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி உள்ளிட்ட முக்கியத் தொழில்நுட்பங்கள் மற்றும் விநியோகச் சங்கிலிகளை இது அடையாளம் காண்கிறது. புத்தாக்கக் கொள்கைகள், சூப்பர் இன்டெலிஜென்ஸ் (SI), விநியோகச் சங்கிலி ஒத்துழைப்பு, பாதுகாப்பு, மீள்திறன் ஆகியவற்றுக்கு ஐந்து பணிக்குழுக்களை இது முன்மொழிகிறது. 'பாக்ஸ் சிலிகா' (Pax Silica) என்பது குறைக்கடத்தி உற்பத்திக்கும் மேம்பட்ட தொழில்நுட்பத் தொழில்களுக்கும் தேவையான சிலிக்கான் மற்றும் பிற கனிமங்களின் விநியோகத்தைப் பாதுகாக்க 2025 டிசம்பரில் அமெரிக்கா தலைமையில் தொடங்கப்பட்ட முன்முயற்சியாகும்.