ஐஐடி ஹைதராபாத், கிரிம்சன் எனர்ஜி எக்ஸ்பர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து ANUGYAN (அணுத் தொழில்நுட்ப அறிமுகத் திட்டம் - Nuclear Technology Orientation Programme) என்ற படிப்பைத் தொடங்கியுள்ளது. இது மூன்று மாத உறைவிடப் படிப்பாகும்; சிவில் அணுசக்தித் துறைக்கான நிபுணர்களைப் பயிற்றுவிக்க தொழில்துறையும் கல்வி நிறுவனமும் இணைந்து நடத்தும் நாட்டின் முதல் திட்டம் இதுவாகும்.