இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் (ICAR), துவரையின் 'ஆஷா' ரகத்துக்கான இந்தியாவின் முதல் முழுமையாகக் குறிப்பிடப்பட்ட 'டெலோமியர்-டு-டெலோமியர்' (T2T) குறிப்பு மரபணுத்தொகுப்பை உருவாக்கியுள்ளது.
இம்மரபணுத்தொகுப்பு 11 குரோமோசோம்களில் 752.65 மில்லியன் அடிப்படை இணைகள், 11 சென்ட்ரோமியர்கள், 22 டெலோமியர்களைக் கொண்டுள்ளது; 99.9%-க்கும் மேற்பட்ட துல்லியத்துடன் 36,557 மரபணுக்கள், 48,008 mRNA-க்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்த முக்கியப் பருப்புப் பயிரான துவரையின் அதிக மகசூல், காலநிலைத் தாங்குதிறன் கொண்ட ரகங்களை உருவாக்க இது உதவும்.