சுமார் 1–2 மீட்டர் அளவுள்ள, 2026 QQ8 எனப் பெயரிடப்பட்ட சிறிய பூமிக்கு அருகிலுள்ள சிறுகோளை பூமி தற்காலிகமாக 'மினி-நிலவாக' ஈர்த்துக்கொண்டது. ஹங்கேரிய வானியலாளர் கிறிஸ்டியான் சார்நெக்கி இதைக் கண்டறிந்தார். 2026 டிசம்பர் வரை பூமிக்கு அருகில் இருந்து, 2027-ல் சூரியனைச் சுற்றும் தனது சுயாதீனப் பாதைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிறுகோள் மையம் (Minor Planet Center – MPC) இதனை இயற்கைப் பொருளாக வகைப்படுத்தியுள்ளது. இது பூமிக்கு மிக அருகில் சுமார் 5,68,000 கி.மீ. தொலைவில் வரும் எனக் கணிக்கப்படுகிறது; இது பூமி–நிலவு சராசரி தொலைவின் சுமார் 1.5 மடங்கு. இது பூமியைத் தாக்கும் அபாயம் இல்லை; வளிமண்டலத்தில் நுழைந்தால் முழுமையாக எரிந்துவிடும். மினி-நிலவு என்பது பூமியின் ஹில் கோளத்துக்குள் (Hill sphere) அதன் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாகப் பிடிக்கப்பட்ட சிறுகோள்; அரை-நிலவு (quasi-moon) பூமியை நேரடியாகச் சுற்றாமல், பூமியின் சுற்றுப்பாதையுடன் ஒத்திசைந்து சூரியனைச் சுற்றுகிறது. இதற்கு முன் 2020 CD3, 2020 SO, 2024 PT5 ஆகியவை இவ்வாறு வந்துள்ளன.