வட இந்தியப் பெருங்கடலில் புயல்களுக்குப் பெயரிடும் முறை செப்டம்பர் 2004இல் தொடங்கியதிலிருந்து, தமிழ்ப் பெயர் பெற்ற முதல் வெப்பமண்டலப் புயல் 'முரசு' ஆகும். முரசு என்பது பண்டைக் காலத்தில் தகவல்களை அறிவிக்கவும், இயற்கைப் பேரிடர்கள் குறித்து மக்களை எச்சரிக்கவும் பயன்படுத்தப்பட்ட பாரம்பரியத் தமிழ்த் தாள இசைக்கருவி. இப்பெயரைச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் (RMC) முன்மொழிந்தது; உலக வானிலை அமைப்பின் (WMO) குழு தயாரித்த இரண்டாவது புயல் பெயர்ப் பட்டியலில் இது சேர்க்கப்பட்டது. மேலும் 12 நாடுகளின் பங்களிப்புடன், முரசு உட்பட 13 பெயர்களை இந்தியா பரிந்துரைத்தது. திருகை, கலப்பை, ஏர், நாவாய் ஆகிய தமிழ்ப் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன.