இன்டெல் இந்தியா (Intel India) நிறுவனத்துடன் இணைந்து IndiaAI தரவு ஆய்வகத்தை (IndiaAI Data Lab) அமைத்த இந்தியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையை சண்டிகர் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI), தரவு அறிவியல் (Data Science) மற்றும் பிற வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் தொழில்துறைக்கு ஏற்ற திறன்களை மாணவர்களுக்கு வழங்குவதே இந்த ஆய்வகத்தின் நோக்கம். IndiaAI முன்முயற்சியின் கீழ் AI திறன் பயிற்சியை விரிவுபடுத்தித் தொழில்நுட்பத் துறைக்குத் தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக இத்தகைய தரவு ஆய்வகங்கள் அமைகின்றன.