6-வது தேசிய மருந்துக் கண்காணிப்பு வாரத்தின் போது புது தில்லியில் இந்திய உயிரியல் கண்காணிப்புத் திட்டம் (Biovigilance Programme of India – BvPI) தொடங்கப்பட்டது. உறுப்பு மற்றும் திசு மாற்று சிகிச்சையில் பயன்படும் உயிரியல் பொருட்கள் தொடர்பான பாதகமான நிகழ்வுகளை BvPI கண்காணிக்கும்; இதனை இந்திய மருந்தியல் ஆணையம் (IPC) வழிநடத்தும். மருந்துகளுக்கான மருந்துக் கண்காணிப்பு (Pharmacovigilance), மருத்துவ உபகரணங்களுக்கான உபகரணக் கண்காணிப்பு (Materiovigilance) திட்டங்களுக்கு இது துணைபுரிகிறது.