இந்தியாவின் BRICS தலைமைப் பொறுப்பு 2026-இன் கீழ், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஏற்பாட்டில், இரண்டாவது BRICS ஊழல் எதிர்ப்புப் பணிக்குழுக் கூட்டமும், சொத்து மீட்பு தொடர்பான இரண்டாவது BRICS நிபுணர் வலையமைப்புக் கூட்டமும் ஹைதராபாத்தில் நடைபெற்றன.
தலைமறைவுக் குற்றவாளிகளைக் கண்டறிதல், சட்டவிரோதச் சொத்துகளை மீட்டல், அமலாக்க அமைப்புகளிடையே தகவல் பகிர்வு ஆகியவை விவாதிக்கப்பட்டன. ஊழல் வழக்குகளுக்கான BRICS சட்ட அமலாக்க வல்லுநர்கள் வலையமைப்பை உருவாக்குவது குறித்துத் தொடர்ந்து விவாதிக்க உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன.