BITS பிலானி (பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம்) விஞ்ஞானிகள், IBM குவாண்டம் நிறுவனத்துடன் இணைந்து ஒரு குவாண்டம் அல்காரிதத்தை உருவாக்கியுள்ளனர்.
- இந்த அல்காரிதம் மரபுக் கணினிகளைவிட (classical computers) மேன்மையை வெளிப்படுத்தியது.
- குவாண்டம் மேன்மை என்பது, சாதாரணக் கணினிகளைவிட ஒரு பணியைக் குவாண்டம் கணினி சிறப்பாகவோ வேகமாகவோ செய்வதைக் குறிக்கிறது.
- இது ஓர் இந்தியக் கல்வி நிறுவனமும் IBM-ன் குவாண்டம் கணினித் திட்டமும் இணைந்து மேற்கொண்ட முயற்சியாகும்.
எதிர்காலக் கணினித் துறையின் முக்கியப் பகுதியான குவாண்டம் தொழில்நுட்பங்களில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஆராய்ச்சிப் பங்களிப்பை இந்த முடிவு மேலும் வலுப்படுத்துகிறது.