பெங்களூரு நகரக் காவல்துறை, நம்ம 112 அவசர உதவி அமைப்பில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பன்மொழி மேம்பாட்டை அறிமுகம் செய்துள்ளது. நம்ம 112, இந்தியாவின் தேசிய அவசர உதவி எண் 112-ஐ இயக்கும் அவசரகால பதில் ஆதரவு அமைப்பின் (ERSS) ஒரு பகுதி. VANKI (Multilingual Voice AI for Nationwide Key Interventions) எனப்படும் புதிய கருவி, அவசர அழைப்புகளை நிகழ்நேரத்தில் மொழிபெயர்க்கிறது. இதனால் மொழித் தடையின்றிக் காவல்துறை, ஆம்புலன்ஸ், தீயணைப்புச் சேவைகள் விரைவாகச் செயல்பட முடியும். அவசர உதவிச் சேவையில் பன்மொழி AI-ஐப் பயன்படுத்தும் இந்தியாவின் முதல் நகரமாகப் பெங்களூரு ஆகியுள்ளது.