2025-இல் ஏறக்குறைய ஒரு டிரில்லியன் AI மற்றும் இயந்திரக் கற்றல் (ML) பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த ஜிஸ்கேலர் த்ரெட்லேப்ஸ் 2026 AI பாதுகாப்பு அறிக்கை, நிறுவன AI/ML பயன்பாட்டில் இந்தியாவை உலகில் இரண்டாமிடத்தில் வைத்துள்ளது. 2025 ஜூன் முதல் டிசம்பர் வரை இந்தியா 8,230 கோடி (82.3 பில்லியன்) பரிவர்த்தனைகளைப் பதிவு செய்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் மொத்த AI செயல்பாட்டில் 46.2% பங்கு வகித்தது. AI பயன்பாட்டில் தொழில்நுட்பம் மற்றும் தகவல்தொடர்புத் துறை முன்னிலையில் இருந்தது; அடுத்து உற்பத்தி, நிதித் துறைகள்.