இந்திய AI தாக்க உச்சி மாநாடு 2026-ல், சுகாதாரத்துக்கான பாதுகாப்பான AI முன்னெடுப்பு (SAHI), சுகாதார AI-க்கான அளவுகோல் திறந்த தரவுத் தளம் (BODH) ஆகியவற்றை ஒன்றிய சுகாதார அமைச்சர் தொடங்கி வைத்தார். SAHI என்பது சுகாதாரத் துறையில் பொறுப்பான AI பயன்பாட்டுக்கான தேசிய ஆளுகைக் கட்டமைப்பு; பொறுப்புடைமை, தனியுரிமை, குடிமக்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் இது கவனம் செலுத்துகிறது. AI சுகாதாரக் கருவிகளைப் பயன்பாட்டுக்கு முன் பாதுகாப்பு, நடைமுறைச் செயல்திறனுக்காகச் சோதித்துச் சரிபார்க்க BODH உதவுகிறது. இவ்விரண்டும் தேசிய சுகாதாரக் கொள்கை 2017, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் (2020) ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை.