செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தை இணைக்கும் இந்தியாவின் முதல் ஹேக்கத்தானான “Hack the Fork”-ஐ NIFTEM-K நடத்தியது. பிரான்ஸைத் தளமாகக் கொண்ட Hack the Fork என்ற இலாப நோக்கற்ற அமைப்பு, NIFTEM-K ஸ்மார்ட் புரோட்டீன் திட்டம், தி குட் ஃபுட் இன்ஸ்டிடியூட் இந்தியா ஆகியவற்றுடன் இணைந்து இது நடத்தப்பட்டது.