பொது நுகர்வோருக்கான நாட்டின் முதல் 5G நெட்வொர்க் ஸ்லைசிங் (Network Slicing) சேவையான 'Priority Postpaid'-ஐ பாரதி ஏர்டெல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. நெட்வொர்க் ஸ்லைசிங் என்பது ஒரே 5G நெட்வொர்க்கைப் பல மெய்நிகர் நெட்வொர்க்குகளாக (slices) பிரித்து, ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பயனர்கள் அல்லது பயன்பாடுகளுக்கான தனி வளங்களை ஒதுக்குவதாகும். நெரிசல் மிகுந்த நேரங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாதாரர்களுக்குச் சிறந்த வேகத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிசெய்ய இது உதவுகிறது.