சூரிய ஒளி எட்டாத, பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 4,000 மீட்டர் ஆழத்தில் 'இருள் ஆக்சிஜன்' (Dark Oxygen) இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- சூரிய ஒளி இல்லாத ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் ஆக்சிஜனையே இச்சொல் குறிக்கிறது.
- பசிபிக் பெருங்கடலின் கிளாரியன்–கிளிப்பர்டன் மண்டலத்தில் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.
- மாங்கனீசு, நிக்கல், கோபால்ட் போன்ற உலோகங்களைக் கொண்ட கடல்தரைப் பல்லுலோகக் கட்டிகள் (polymetallic nodules) அருகே ஆக்சிஜன் அளவு அதிகரிப்பது கவனிக்கப்பட்டது.
- ஒளிச்சேர்க்கை மூலம் மட்டுமே ஆக்சிஜன் உற்பத்தியாகிறது என்ற நீண்டகாலக் கருத்துக்கு இக்கண்டுபிடிப்பு சவால் விடுகிறது.