பீர்பால் சாஹ்னி தொல் அறிவியல் நிறுவனத்தின் (BSIP) விஞ்ஞானிகள், அசாமின் மகும் நிலக்கரி வயலில் உள்ள திகக் பர்பத் அமைப்பில் (Tikak Parbat Formation) 2.4 கோடி (24 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கேவ்டா (கேவ்ரா / பாண்டனஸ் – தாழை) தாவரத்தின் இலைப் புதைபடிவங்களைக் கண்டறிந்துள்ளனர். இப்புதைபடிவங்கள் பாண்டனேசி (Pandanaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்தியத் துணைக்கண்டத்தில் இத்தாவரம் குறைந்தது 2.4 கோடி ஆண்டுகளாக நிலைத்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது; அதாவது இது மனித நாகரிகத்தை விடப் பழமையானது, இமயமலையின் இறுதி உயர்வுக்கும் முந்தையது.