பாரசீகப் புத்தாண்டையும் வசந்தகாலத்தின் வருகையையும் கொண்டாட, ஆண்டுதோறும் மார்ச் 21 அன்று சர்வதேச நவ்ரோஸ் (Nowruz) தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இது வசந்தகாலச் சம இரவு நாளுடன் (vernal equinox) ஒத்துப்போகிறது; குளிர்காலத்திலிருந்து வசந்தகாலத்துக்கு மாறும் பருவ மாற்றத்தைக் குறிக்கிறது.
- ‘நவ்ரோஸ்’ என்றால் ‘புதிய நாள்’; இது புதுப்பித்தல், நம்பிக்கை, புதிய தொடக்கங்களைக் குறிக்கிறது.
- 2010-இல் ஐக்கிய நாடுகள் சபை இந்நாளை அங்கீகரித்தது.
- மத்திய ஆசியா, காகசஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இது கொண்டாடப்படுகிறது.