வெளிநாட்டு மூலங்களிலிருந்து பெறப்படும் நிதி மீதான கண்காணிப்பைக் கடுமையாக்கவும், அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமையை மேம்படுத்தவும், வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. FCRA பதிவு ரத்து செய்யப்பட்டாலோ, காலாவதியானாலோ, புதுப்பிக்கப்படாவிட்டாலோ வெளிநாட்டு நிதி மற்றும் சொத்துகளைக் கையகப்படுத்த ஒரு நியமிக்கப்பட்ட அதிகார அமைப்பை (Designated Authority) இது முன்மொழிகிறது; புதுப்பிக்காவிட்டால் பதிவு தானாகவே காலாவதியாகும். நிதியின் முறையான பயன்பாட்டுக்கு இயக்குநர்கள், அறங்காவலர்கள், கூட்டாளிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பாவர். குறிப்பிட்ட காலத்துக்குள் நிதியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குவதுடன், இடைநீக்கத்தில் உள்ள அமைப்புகள் சொத்துகளை மாற்றவோ விற்கவோ மசோதா தடை விதிக்கிறது.