இணையவழி மற்றும் நேரடிச் சந்தைகளில் நுகர்வோர் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும் உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2026 மார்ச் 15 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது; 2026-இன் கருப்பொருள் 'பாதுகாப்பான பொருட்கள், நம்பிக்கையுள்ள நுகர்வோர்' (Safe Products, Confident Consumers). தூக்கமின்மை (insomnia), உறக்கத் திணறல் (sleep apnoea) போன்ற உறக்கக் கோளாறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் சம இரவு நாளுக்கு (equinox) முந்தைய வெள்ளிக்கிழமை உலக உறக்க தினம் கடைப்பிடிக்கப்படுகிறது; 2026-இல் இது மார்ச் 13 அன்று வந்தது. உலக உறக்க தினம் 2026-இன் கருப்பொருள் 'நன்றாக உறங்குங்கள், சிறப்பாக வாழுங்கள்' (Sleep Well, Live Better).