எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders - RSF) வெளியிட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீடு 2026-இல் இந்தியா 180 நாடுகளில் 157வது இடத்தைப் பிடித்துள்ளது. 2025-இல் 151வது இடத்தில் இருந்த இந்தியா சரிந்து, 'மிகவும் கவலைக்கிடமான' (very serious) பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஊடகச் சுதந்திரம், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு, சட்டச் சூழல் போன்ற குறிகாட்டிகளைக் கொண்டு இந்த ஆண்டுக் குறியீடு மதிப்பிடப்படுகிறது. பத்திரிகையாளர்கள் மீதான வன்முறை, ஊடக உரிமை குவிப்பு, சட்ட அழுத்தங்கள் ஆகியவற்றை 2026 அறிக்கை சுட்டிக்காட்டியது. உலக அளவில் பாதிக்கும் மேற்பட்ட நாடுகள் 'கடினமான' அல்லது 'மிகவும் கவலைக்கிடமான' பிரிவுகளில் உள்ளன.