லடாக்கில் இரண்டு புதிய தொலைநோக்கிகளுக்கும், அங்கு ஏற்கனவே இயங்கும் ஒன்றின் மேம்பாட்டுக்கும் ஒன்றிய பட்ஜெட் 2026-இல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பாங்காங் ஏரிக்கு அருகிலுள்ள மேராக்கில் அமையவுள்ள தேசியப் பெரும் சூரியத் தொலைநோக்கி, சூரியனையும் விண்வெளி வானிலையையும் ஆய்வு செய்யப் பயன்படும். ஹான்லே இருண்ட வான் காப்பகத்துக்குள், விண்மீன்கள், புறக்கோள்கள், தொடக்ககாலப் பிரபஞ்சத்தைக் கண்காணிக்கத் தேசியப் பெரும் ஒளியியல்-அண்மை அகச்சிவப்புத் தொலைநோக்கி அமைக்கப்படும். மேலும், ஹான்லேயில் உள்ள இமாலய சந்திரா தொலைநோக்கிக்குப் பெரிய பிரிவு ஆடி (segmented mirror) பொருத்தப்படும்.