2026-இல் உயிரி எரிசக்தி (biomass energy) உற்பத்தியில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா முதலிடத்திலும், கரும்பு அடிப்படையிலான உயிரி எத்தனால் காரணமாகப் பிரேசில் இரண்டாமிடத்திலும், இந்தோனேசியா மூன்றாமிடத்திலும், சீனா நான்காமிடத்திலும் உள்ளன. மரம், பயிர்க் கழிவுகள், உணவுக் கழிவுகள், கால்நடைச் சாணம் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து உயிரி எரிசக்தி உற்பத்தியாகிறது; இவை மீண்டும் உருவாக்கக்கூடியவை என்பதால் இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாகக் கருதப்படுகிறது. கிராமப்புறங்களில் ஏராளமாகக் கிடைக்கும் வேளாண் கழிவுகள், கால்நடைக் கழிவுகளைச் சார்ந்த உயிரி எரிசக்தி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கலவையின் முக்கியக் கூறாகும்.