'உலகளாவிய ஆளுகையும் திறன்மிக்க தலைமைத்துவமும்' என்ற கருப்பொருளில் உலக அரசுகள் உச்சி மாநாடு 2026, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்றது. சர்வதேச ஒத்துழைப்பு, புத்தாக்கம், திறமையான பொது நிர்வாகம் ஆகியவற்றை ஊக்குவித்து, எதிர்கால அரசுகள் செயல்படும் விதத்தை வடிவமைப்பது இம்மாநாட்டின் நோக்கம். ஆளுகை, செயற்கை நுண்ணறிவு, பொருளாதாரம், சுகாதாரம், பொதுத்துறைப் புத்தாக்கம் ஆகியவை விவாதங்களின் மையமாக இருந்தன. ஆண்டுதோறும் நடைபெறும் இம்மாநாட்டில் அரசுத் தலைவர்கள், அமைச்சர்கள், சர்வதேச அமைப்புகள், நிபுணர்கள் ஒன்றுகூடுகின்றனர்.