உச்ச நீதிமன்றம் மற்றும் அனைத்து உயர் நீதிமன்றங்களின் பொது மொழியாக ஆங்கிலத்தைத் தொடர்வது என்ற 1965 ஒன்றிய அமைச்சரவை முடிவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (MHAA) பொதுநல வழக்கு (PIL) தாக்கல் செய்துள்ளது. இந்தி பொது மொழியாகப் பயன்படுத்தத் தகுதி பெறும் வரை ஆங்கிலத்தைத் தொடர வேண்டும் என்று பரிந்துரைத்த அந்த முடிவு, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அறிமுகப்படுத்துவதையும் எதிர்த்தது. இம்முடிவு அரசமைப்பின் உறுப்புகள் 14, 19, 21 ஆகியவற்றை மீறுவதாக MHAA வாதிடுகிறது. உறுப்பு 348(2)இன்படி, குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் ஆளுநர், உயர் நீதிமன்ற நடவடிக்கைகளில் மாநில அலுவல் மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கலாம்; ஆனால் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் (decrees), உத்தரவுகளுக்கு இது பொருந்தாது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அறிமுகப்படுத்த 2006, 2014ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அனுப்பிய முன்மொழிவுகளை ஒன்றிய அரசு நிராகரித்தது. இதற்காகத் தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 செப்டம்பர் 3 அன்று மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.