புகைப்படக் கலைஞர்களைப் போற்றவும், முக்கியத் தருணங்களைப் பாதுகாப்பதில் புகைப்படக் கலையின் பங்கை அங்கீகரிக்கவும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 19 அன்று உலக புகைப்பட தினம் அனுசரிக்கப்படுகிறது; 2026-ஆம் ஆண்டுக்கான கருப்பொருள் “HOME” (இல்லம்). பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் சர்வதேச தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டோரைக் கௌரவித்து நினைவுகூர்வதுடன் அவர்களின் மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை மேம்படுத்துவதே இதன் நோக்கம். இதன் 2026 கருப்பொருள் “Healing through Memory” (நினைவின் வழியே குணமடைதல்).