1,143 கி.மீ.க்கும் மேலான இயக்கப் பாதைகளுடன் இந்திய மெட்ரோ ரயில் வலையமைப்பு உலகின் மூன்றாவது பெரிய வலையமைப்பாகியுள்ளது. 2014-இல் வெறும் 248 கி.மீ. ஆக இருந்த இது பெருமளவில் வளர்ந்துள்ளது; அதே காலத்தில் மெட்ரோ சேவை உள்ள நகரங்களின் எண்ணிக்கை 5-இலிருந்து 29-ஆக உயர்ந்துள்ளது. தற்போது சீனா, அமெரிக்கா ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் நகர்ப்புறப் பொதுப் போக்குவரத்து உள்கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பெரும் முயற்சியை இவ்விரிவாக்கம் காட்டுகிறது.