தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் சிறந்த நடைமுறைகளைக் காட்சிப்படுத்த நடத்தப்பட்ட, பொது சுகாதாரத்தில் புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கம் குறித்த 10வது தேசிய உச்சி மாநாட்டை ஒன்றிய சுகாதார அமைச்சர் தொடங்கிவைத்தார். பல முயற்சிகள் தொடங்கப்பட்டன. ஸ்வஸ்த் பாரத் இணையதளம் சுகாதாரத் திட்டங்களைக் கண்காணித்து, செயல்திறனை மதிப்பிட்டு, முடிவெடுக்க உதவும் டிஜிட்டல் தளம். ஜனனி டிஜிட்டல் தளம் கர்ப்பங்களைக் கண்காணித்து, பாதுகாப்பான பிரசவங்களை ஊக்குவித்து, தாய்-சேய் நலனுக்கு உதவுகிறது. 17வது பொது மறுஆய்வு இயக்க அறிக்கை மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களின் சுகாதாரத் திட்டங்களை மதிப்பிடுகிறது; ஒருங்கிணைந்த பயிற்சி தொகுதி ஆரம்ப சுகாதாரப் பணியாளர்களின் பயிற்சியைத் தரப்படுத்துகிறது. அரசு மருத்துவமனைகளில் புறநோயாளி சிகிச்சைக்கான சராசரி (median) சொந்தச் செலவு பூஜ்ஜியம் என்ற நிலையையும் இந்தியா எட்டியுள்ளது.