100 மெகாவாட்-மணி (MWh) திறன் கொண்ட இந்தியாவின் முதல் பயன்பாட்டு அளவிலான (utility-scale) வனேடியம் ரெடாக்ஸ் ஃப்ளோ பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புத் (VRFB BESS) திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குஜராத்தின் கவ்டா (Khavda) சூரிய மின் பூங்காவில் அமைக்கப்படும். பகலில் உற்பத்தியாகும் உபரி சூரிய மின்சாரத்தைச் சேமித்துப் பின்னர் வழங்க பேட்டரி ஆற்றல் சேமிப்பு உதவுவதால், மின்கட்டமைப்பில் அதிக அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைக்க முடியும்.