செவ்வாய்க் கோளிலிருந்து வந்த 'டெகாசா 001' (Teghaza 001) விண்கல் குறித்த ஆய்வு, பண்டைய செவ்வாயில் நீர் செயல்பாடு இருந்ததற்கான சான்றை வழங்குகிறது. 2022-இல் மாலி நாட்டின் சஹாரா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட இவ்விண்கல் சுமார் 800 கிராம் எடை கொண்டது; 410 கோடி (4.1 பில்லியன்) ஆண்டுகளுக்கும் மேலான பழமை கொண்ட இது, பூமியில் கண்டெடுக்கப்பட்ட மிகப் பழமையான மூன்று செவ்வாய் விண்கற்களில் ஒன்றாகும். சுமார் 410 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாயில் திரவ நீர் இப்பாறையை மாற்றியமைத்ததை NASA நிதியுதவி பெற்ற ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து தரையை அடையும் விண்வெளிப் பாறைத் துண்டே விண்கல் (meteorite) எனப்படும். செவ்வாய் விண்கற்கள் முக்கியமாக ஷெர்கோட்டைட்ஸ் (Shergottites), நக்லைட்ஸ் (Nakhlites), சாசிக்னைட்ஸ் (Chassignites) என மூன்று (SNC) பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.