அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதாரக் குழுமமான வால்கிரீன்ஸ் (Walgreens) சென்னையில் உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்க உள்ளது. மாநிலத்துக்கு முதலீடுகளைக் கொண்டுவரும் முதன்மை முகமையாக Tamil Nadu Guidance செயல்படுகிறது. தமிழ்நாட்டில் 450-க்கும் மேற்பட்ட GCC-கள் உள்ளன; இது இந்தியாவின் GCC சூழலில் சுமார் 10–15% ஆகும். கர்நாடகா, தெலங்கானாவுக்கு அடுத்து இந்தியாவின் மூன்றாவது பெரிய GCC மையமாகத் தமிழ்நாடு உள்ளது. GCC என்பது மென்பொருள் உருவாக்கம், தரவுப் பகுப்பாய்வு, ஆராய்ச்சி போன்ற பணிகளைக் கையாள, ஒரு நிறுவனம் வேறொரு நாட்டில் சொந்தமாக நடத்தும் அலுவலகம் ஆகும்.