அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் சுமார் 20 லட்சம் பேரை உள்ளடக்கிய 2025-26-க்கான தேசிய போதைப்பொருள் பயன்பாட்டுக் கணக்கெடுப்புக்கு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நிதியளிக்கும். முதன்முறையாக, பாரம்பரிய மற்றும் உள்ளூர் வடிவிலான போதைப்பொருள் பயன்பாட்டை இது பதிவு செய்யும்; சிறைக் கைதிகளையும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களையும் உள்ளடக்கும். இதன் முடிவுகள் போதையில்லா இந்தியா இயக்கத்துக்கு (நஷா முக்த் பாரத் அபியான்) உதவும். களப்பணி 2026 இறுதிக்குள் முடிவடையும்; அறிக்கை 2027-ல் வெளியாகும்.