கேரள சட்டப்பேரவையின் ஒருமனதான தீர்மானத்தைத் தொடர்ந்து, கேரளாவின் பெயரை 'கேரளம்' என மாற்றும் முன்மொழிவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. சட்டப்பிரிவு 3-ன் கீழ், கேரளா (பெயர் மாற்றம்) மசோதா, 2026-ஐ மாநிலச் சட்டமன்றத்தின் கருத்தைப் பெறக் குடியரசுத் தலைவர் அனுப்புவார். அதன்பின், நாடாளுமன்றத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தக் குடியரசுத் தலைவரின் பரிந்துரையை ஒன்றிய அரசு கோரும். எந்த மாநிலத்தின் பெயரையும் சட்டம் மூலம் மாற்ற நாடாளுமன்றத்துக்குச் சட்டப்பிரிவு 3 அதிகாரம் அளிக்கிறது.