தமிழ்நாடு கடற்கரை மீட்டெடுப்பு முன்முயற்சியின் (TN-SHORE) கீழ், கடலூர் மாவட்டம் கிள்ளை அருகே உள்ள முழுக்குத்துறையில் ₹26.50 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் முதல் அலையாத்திக் காடுகள் (Mangrove) பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய அலையாத்திக் காடுகளில் ஒன்றான பிச்சாவரம் அருகே அமையும் இம்மையம், அலையாத்திப் பாதுகாப்பு, சூழலியல் மீட்டெடுப்பு, அறிவியல் ஆராய்ச்சி, பல்லுயிர்ப் பாதுகாப்பு, விழிப்புணர்வு ஆகியவற்றுக்கு உதவும். உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் நிலையான சூழல் சுற்றுலாவையும் ஊக்குவித்து, ராம்சார் உடன்படிக்கை கடமைகளை நிறைவேற்ற உதவும்.