87 ஆண்டுகள் பழமையான தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939-க்குப் பதிலாக, தற்கால மற்றும் எதிர்கால சுகாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் நவீன, விரிவான சட்டம் கொண்டுவரப்படும். மருத்துவமனைக்கு வெளியே மருத்துவக் கண்காணிப்பின்றி வீட்டில் நடைபெறும் பிரசவம் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படும். கர்ப்பிணிகளின் இரத்த அழுத்தத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்க புளூடூத் வசதியுள்ள BP கருவிகள், முதன்முறையாக 'மாதவிடாய் நிறுத்தக் கால நலக் கொள்கை' (அனைத்து ஆரம்ப மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாராந்திர முகாம்கள்), டைப் 1 நீரிழிவு உள்ள 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டு முழுவதும் இலவச இன்சுலின், ₹6.37 கோடி செலவில் 'இரும்புக் கண்மணி' பள்ளி இரத்தசோகைத் தடுப்புத் திட்டம் ஆகியவையும் அறிவிக்கப்பட்டன.