தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலத்துக்கான புதிய தொழில் திட்டங்களை அறிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலத்தில் ₹175 கோடியில் சிப்காட் (SIPCOT) மூலம் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உற்பத்திப் பூங்கா அமைக்கப்படும். டிட்கோ (TIDCO) மூலம் பொது-தனியார் கூட்டாண்மை (PPP) முறையில் ₹400 கோடியில் கோயம்புத்தூர் நிதித் தொழில்நுட்ப (FinTech) மையம் உருவாக்கப்படும். தொழிற்சாலைகள் மற்றும் சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவத் திருச்சி பகுதியில் பல்முனைச் சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கப்படும். மேலும் மாநில மின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தூத்துக்குடியில் புதிய மீஉய்ய அழுத்த (supercritical) அனல் மின் நிலையம் அமைக்கப்படும்.