தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வினோத் சட்டப்பேரவையில் வேளாண் உள்கட்டமைப்பு மற்றும் விவசாயிகள் ஆதரவு நடவடிக்கைகளை அறிவித்தார். விதைகளின் தரம், முளைப்புத் திறன், வீரியத்தைப் பாதுகாக்க 7 மாவட்டங்களில் ₹11.64 கோடியில் 9 விதைச் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். தரமான இடுபொருட்களைக் கிராமங்களுக்கு அருகில் வழங்க ₹2.85 கோடியில் விதைச் சேமிப்பு வசதியுடன் 4 புதிய துணை வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும். ₹6.84 கோடியில் விவசாயிகளுக்கு 28,500 தேனீ வளர்ப்புப் பெட்டிகளும் 2,850 தேன் பிரித்தெடுக்கும் கருவிகளும் வழங்கப்படும். 5 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு (FPO) குளிர்பதன சரக்கு வாகனங்களுக்கு மானியமும், 100 FPO-க்களுக்கு மின்னணு ஈரப்பதமானி வாங்க உதவியும் வழங்கப்படும்.