வரிக் கழுதைப்புலியை (Striped Hyena) வலசை போகும் வன உயிரினங்களின் பாதுகாப்புக்கான உடன்படிக்கையின் (CMS) பின்னிணைப்பு I மற்றும் II-ல் சேர்க்க தஜிகிஸ்தானும் உஸ்பெகிஸ்தானும் முன்மொழிந்துள்ளன. 2026 மார்ச் 23 முதல் 29 வரை பிரேசிலின் காம்போ கிராண்டேயில் நடைபெறவுள்ள CMS-ன் 15-வது உறுப்பினர் மாநாட்டில் (COP15) இம்முன்மொழிவு விவாதிக்கப்படும். பின்னிணைப்பு I கடுமையான பாதுகாப்பு தேவைப்படும் அழிவின் விளிம்பிலுள்ள வலசை இனங்களையும், பின்னிணைப்பு II சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் இனங்களையும் உள்ளடக்கியது. IUCN சிவப்புப் பட்டியலில் வரிக் கழுதைப்புலி 'அச்சுறு நிலையை நெருங்கியது' (Near Threatened) என வகைப்படுத்தப்பட்டுள்ளது.