இந்தியக் காவல்துறை நிலை அறிக்கை (SPIR) 2026-ஐ லோக்நீதி–வளரும் சமூகங்கள் ஆய்வு மையம் (CSDS), காமன் காஸ் (Common Cause) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன. 16 மாநிலங்களைச் சேர்ந்த 8,306 குடிமக்களிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையிலான இவ்வறிக்கை, இணையக் குற்றங்கள், காவல்துறையின் குறைதீர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இணையக் குற்ற வழக்குகள் 2023-இல் 86,420-இலிருந்து 2024-இல் 1,01,928-ஆக 17.9% அதிகரித்தன; அதே காலத்தில் மொத்தப் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் 6% குறைந்தன. கணக்கெடுப்பில் பங்கேற்றோரில் சுமார் 13% பேர் கடந்த 2–3 ஆண்டுகளில் இணையக் குற்றத்தால் பாதிக்கப்பட்டனர்; அவர்களில் 54% பேர் நிதி மோசடிக்கு ஆளாகினர். பாதிக்கப்பட்டோரில் 49% பேர் மட்டுமே காவல்துறையில் முறையான புகார் அளித்தனர்; புகார் அளித்தோரில் 27% பேர் காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்தனர்.