SAPLING (South Asian Policy Leadership for Improved Nutrition and Growth) உரையாடல் 2026, குஜராத்தின் அகமதாபாத்தில் நிறைவடைந்தது. இதனை ஒன்றிய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகமும் (MoFPI) உலக வங்கிக் குழுமமும் இணைந்து நடத்தின. கருப்பொருள்: "Unlocking Value: Advancing Food Processing for Employment Generation and Sustainable Growth in South Asia". SAPLING என்பது தெற்காசியாவில் நெகிழ்திறன் மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, ஊட்டச்சத்து சார்ந்த உணவு அமைப்புகளை ஊக்குவிக்க உலக வங்கி தலைமையில் இயங்கும் பிராந்தியத் தளமாகும். இதில் வெளியிடப்பட்ட "இந்தியாவில் உணவு பதப்படுத்தல் நிலை மதிப்பீடு" அறிக்கையின்படி, இந்தியாவின் உணவு பதப்படுத்தல் நிலை 2016-இல் சுமார் 10%-இலிருந்து 2023-இல் கிட்டத்தட்ட 17% ஆக உயர்ந்துள்ளது.