SAMARTH பஞ்சாயத்து இணையதளம் மூலம் ஊராட்சிச் சொத்து வரியை இணையவழியில் வசூலித்த இந்தியாவின் முதல் மாவட்டமாகச் சத்தீஸ்கரின் தம்தரி மாவட்டம் உருவெடுத்துள்ளது. நக்ரி வட்டாரத்தின் சங்கரா கிராம ஊராட்சியில் தொடங்கப்பட்ட இச்சேவை UPI அடிப்படையிலான பணப்பரிமாற்றத்தைப் பயன்படுத்துவதால், மக்கள் வீட்டிலிருந்தே வரி செலுத்த முடிகிறது; காகிதப் பணியும் தாமதமும் குறைகின்றன. மாவட்டத்தின் ஏறக்குறைய 400 கிராம ஊராட்சிகளுக்கு இது விரிவாக்கப்பட்டுள்ளது; மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படலாம். இது வெளிப்படைத்தன்மை, வருவாய் வசூல், ஊராட்சிகளின் நிதித் தற்சார்பு ஆகியவற்றை மேம்படுத்தும்.