மோட்டார் சைக்கிள் உற்பத்தி நிறுவனமான ராயல் என்ஃபீல்டு, ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள சத்தியவேடுவில் புதிய உற்பத்தி ஆலை அமைக்க ₹2,200 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதுவரை அந்நிறுவனத்தின் உற்பத்தி முழுவதும் தமிழ்நாட்டிலேயே நடைபெற்று வந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு வெளியே அமையும் அதன் முதல் உற்பத்தி ஆலை இதுவாகும். தென்னிந்தியாவின் தொழில் முதலீட்டுப் போக்கில் இது முக்கியமான விரிவாக்கமாகக் கருதப்படுகிறது.