கனிமப் பாதுகாப்பு: இந்தியாவின் சுழற்சிப் பொருளாதார முயற்சி
மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் முக்கியக் கனிம மறுசுழற்சி ஊக்குவிப்புத் திட்டத்தின் (IS-PCMR) கீழ் 58 நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ₹1,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், தேசிய முக்கியக் கனிம இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.
திட்டத்தின் நோக்கங்கள்:
- இறக்குமதி குறைப்பு: லித்தியம், கோபால்ட் போன்ற கனிமங்களுக்குப் பிற நாடுகளைச் சார்ந்திருப்பதைத் தவிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
- முக்கியத் துறைகள்: லித்தியம்-அயன் பேட்டரி மறுசுழற்சி, மின்னணுக் கழிவுகள் (e-waste) மேலாண்மை ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
- முதலீடு: இந்த 58 நிறுவனங்கள் மூலம் சுமார் ₹5,000 கோடி முதலீடு மற்றும் ஆண்டுக்கு 850 கிலோ டன் மறுசுழற்சித் திறன் எதிர்பார்க்கப்படுகிறது.