சென்னையைச் சேர்ந்த அஹீசா டிஜிட்டல் இன்னோவேஷன்ஸ் நிறுவனம், தனது உள்நாட்டு அகலக்கற்றை (broadband) System-on-Chip (SoC) ஆன 'விஹான்' (VIHAAN) சில்லில் முதல் முயற்சி சிலிக்கான் வெற்றியை (first-pass silicon success) அடைந்துள்ளது. இச்சில்லு RISC-V (Reduced Instruction Set Computer–V) கட்டமைப்பில் உருவாக்கப்பட்டு, மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (C-DAC) உருவாக்கிய 64-பிட் 'வேகா' (VEGA) செயலியால் இயங்குகிறது. முதல் உற்பத்தி முயற்சியிலேயே சில்லு வடிவமைத்தபடி செயல்பட்டது இந்தியாவின் உள்நாட்டு குறைக்கடத்தி வடிவமைப்புத் துறைக்கு முக்கிய முன்னேற்றமாகும்.